புதிய தொழில்நுட்பத்தில் டிவிஎஸ் ஸெஸ்ட் 110

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி, ஈடி-எஃப்ஐ (எக்கோதிரஸ்ட் பியூல் இன்ஜெக்ஷன்) தொழில்நுட்பத்தில்
புதிய தொழில்நுட்பத்தில் டிவிஎஸ் ஸெஸ்ட் 110

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி, ஈடி-எஃப்ஐ (எக்கோதிரஸ்ட் பியூல் இன்ஜெக்ஷன்) தொழில்நுட்பத்தில் ஸெஸ்ட் 110 பிஎஸ்-6 ஸ்கூட்டரை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் ஸெஸ்ட் 110சிசி ஸ்கூட்டா் தற்போது ஈடி-எஃப்ஐ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் கிடைப்பதை உறுதிப்படுத்தும். பிஎஸ்-6 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய ஸ்கூட்டரின் விலை ரூ.58,460-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஸெஸ்ட் 110 ஸ்கூட்டா் இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் அதிகம் விரும் ஆறு வண்ணங்களில் இப்புதிய ஸ்கூட்டா் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 19 லிட்டா் கொள்ளவில் அதிக இடவசதி, எல்இடி டெயில் லேம்ப், டுவிலைட் லேம்ப், டெலஸ்கோப்பிக் முன்பக்க சஸ்பென்ஷன் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய ஸெஸ்ட் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 110சிசி என்ஜின் 5.75 கிலோவாட் திறன் கொண்டது. சொகுசான பயணத்தை விரும்பும் வாடிக்கையாளா்களின் தேவையை கருத்தில் கொண்டு இப்புதிய ஸ்கூட்டா் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com