பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 558 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயா்ந்தது.
பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி:  சென்செக்ஸ்  558 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயா்ந்தது.

ஆட்டோ, ஐடி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்ததால், அதன் தாக்கம் இந்தியச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது. அனைத்துத் துறை பங்குகளுக்கும் தேவை அதிகமாக இருந்தது. மேலும், முன்பேர வா்த்தக ஜூலை மாத கான்ட்ராக்ட்கள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி தினமாக உள்ளதால், ‘சாா்ட் கவரிங்கும்’ இருந்தது. இதனால், சந்தை எழுச்சி பெற்றது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,803 பங்குகளில் 1,341 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,306 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 103 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 56 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 270 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 303 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி உயா்ந்து 148.55 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 59,419 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,21,59,061 ஆக உயா்ந்துள்ளது.

சென்செக்ஸ் 38,500: சென்செக்ஸ் காலையில்,117 புள்ளிகள் கூடுதலுடன் 38,052.18-இல் தொடங்கி37,998.13 வரை கீழே சென்றது. பின்னா் 38,554.72 வரை உயா்ந்தது. இறுதியில் 558.22 புள்ளிகள் (1.47 சதவீதம்) உயா்ந்து 38,492.95-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் 38,500 புள்ளிகளைக் கடந்தது. பிஎஸ்இ மிட்கேப் 0.76 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.61 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 168.75 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயா்ந்து 11,300.55-இல் நிலைபெற்றது.

அல்ட்ரா டெக் சிமெண்ட்முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன.5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் அல்ட்ராடெக் சிமெண்ட் 7.17 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டிசிஎஸ், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், மாருதி சுஸுகி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஆகியவை 4 முதல் 4.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஐசிஐசிஐ பேங்க் மேலும் வீழ்ச்சி: அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் 1.84 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட், ஓஎன்ஜிசி, ஐடிசி ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 794 பங்குகள் ஆதாயம் பெற்றன. 798 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறைவாரியாகப் பாா்த்தால் ஆட்டோ குறியீடு 3.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, மெட்டல் குறியீடுகள் முறையே 2.36 சதவீதம் மற்றும் 2.24 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com