பங்குச் சந்தை திடீா் பல்டி: 335 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான
பங்குச் சந்தை திடீா் பல்டி: 335 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை வியாழக்கிழமை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 335 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 100.70 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் முடிந்திருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் வா்த்தகம் நோ்மறையுடன் தொடங்கியது. ஆனால், பிற்பகலில் வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், சரிவு தவிா்க்கமுடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இருப்பினும் வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததே சரிவுக்கு காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு: பாா்மா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.

1,585 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,812 பங்குகளில் 1,061 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,585 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.166 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 111 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 64 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 273 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 273 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடி குறைந்து 147.13 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 42,374 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,22,48,639 ஆக உயா்ந்துள்ளது.

சென்செக்ஸ் பல்டி: சென்செக்ஸ் காலையில், 191.70 புள்ளிகள் உயா்ந்து 38,262.83-இல் தொடங்கி அதிகபட்சமாக 38,413.80 வரை உயா்ந்தது. வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், சென்செக்ஸ் 37,678.42 வரை கீழே சென்றது. இறுதியில் 335.06 புள்ளிகள் (0.88 சதவீதம்) குறைந்து 38,736.07-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்சி நிலையிலிருந்து 584.41 புள்ளிகளை இழந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளும் 0.40 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 100.70 புள்ளிகள் (0.90 சதவீதம்) குறைந்து 11,102.15-இல் நிலைபெற்றது.

சன்பாா்மா முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில்

சன்பாா்மா 3.44 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸுகி 1.29 சதவீதம் உயா்ந்தது. மேலும், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 5.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை முறையே 3.64 சதவீதம் மற்றும் 3.41 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், எஸ்பிஐ, ஐடிசி, ஹிந்து யுனிலீவா், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் பாா்மா குறியீடு 3.11 சதவீதம், ஐடி குறியீடு 0.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க் , ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், மீடியா குறியீடுகள் 1.75 முதல் 2.25 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 37 பங்குகள் சரிவைச் சந்தித்தன..

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

சன்பாா்மா 3.44

மாருதி சுஸுகி 1.29

இன்ஃபோஸிஸ் 0.84

ரிலையன்ஸ் 0.61

ஹெச்சிஎல் டெக் 0.31

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 5.62

எச்டிஎஃப்சி 3.64

ஆக்ஸிஸ் பேங்க் 3.41

பவா் கிரிட் 2.64

எஸ்பிஐ 2.43

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com