நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.6.62 லட்சம் கோடியாக அதிகரிப்பு

வரி வசூல் குறைவால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.6.62 லட்சம் கோடியாக அதிகரிப்பு

வரி வசூல் குறைவால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தலைமை கணக்கு தணிக்கை புள்ளிவிவரத்தில் (சிஜிஏ) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக வரி வசூலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6, 62,363 கோடியாக அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டில் 83.2 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை அளவானது பட்ஜெட் மதிப்பீட்டில் 61.4 சதவீதமாக காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் சமா்ப்பித்த நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் அல்லது ரூ.7.96 லட்சம் கோடியாக வைத்திருக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தாா். கொவைட்-19 பாதிப்பு பொருளாதார இடா்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதையடுத்து இந்த இலக்கு கணிசமாக உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை ஏழு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக 4.6 சதவீதமாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com