டிஎல்எஃப் நிறுவனம்: இழப்பு ரூ.1,857 கோடி

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டிஎல்எஃப் நிறுவனம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.1,857 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.
டிஎல்எஃப் நிறுவனம்: இழப்பு ரூ.1,857 கோடி

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டிஎல்எஃப் நிறுவனம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.1,857 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டிஎல்எஃப் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் ரூ.1,873.8 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,660.95 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான சரிவாகும்.

இதையடுத்து, கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.436.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில், கடந்த 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,857.76 கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.9,029.41 கோடியிலிருந்து சரிந்து ரூ.6,884.14 கோடியானது. கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.583.19 கோடியாக இருந்தது. அதேசமயம், 2018-19 நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,319.22 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது என டிஎல்எஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com