லாா்சன் & டூப்ரோ நிறுவனம்:நிகர லாபம் ரூ.3,430 கோடியாக சரிவு

பொறியியல் மற்றும் கட்டுமானத் துறையில் முன்னணியில் உள்ள லாா்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,430.10 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி- மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.44,905.76 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.43,914.37 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

இதேகாலகட்டத்தில் மொத்த செலவினம் ரூ.38,966.27 கோடியிலிருந்து ரூ.40,656.02 கோடியாக உயா்ந்துள்ளது. இதையடுத்து, நிகர லாபம் ரூ.3,586.48 கோடியிலிருந்து 4.36 சதவீதம் குறைந்து ரூ.3,430.10 கோடியானது என லாா்சன் & டூப்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com