ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனத்தின் பங்குகள் சரிவு

கடந்த மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 26.46 சதவீதம் குறைந்ததால்,
ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனத்தின் பங்குகள் சரிவு

கடந்த மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 26.46 சதவீதம் குறைந்ததால், அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை 4 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனம், வரவு-செலவு அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், கடந்த மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 26.46 சதவீதம் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த நிறுவனத்தின் லாபம் ரூ.613.81 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.776.23 கோடியாக இருந்தது.

இந்த அறிக்கையை பங்குச் சந்தையிடம் ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனம் தாக்கல் செய்தது. இதையடுத்து, பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 3.92 சதவீதம் குறைந்து ரூ. 2,292.20 ஆனது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 3.46 சதவீதம் குறைந்து ரூ.2,304.50-ஆக ஆனது.

நான்காவது காலாண்டில் ரூ.6,333.89 கோடி வருவாய் ஈட்டியதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.8,120.73 கோடி வருவாய் ஈட்டியதாகவும் ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com