65,651 காா்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா

எரிபொருள் பம்புகளில் கோளாறு காணப்பட்டதையடுத்து அதனை சரி செய்து தரும் வகையில் பல்வேறு மாடல்களைச் சோ்ந்த
65,651 காா்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா

எரிபொருள் பம்புகளில் கோளாறு காணப்பட்டதையடுத்து அதனை சரி செய்து தரும் வகையில் பல்வேறு மாடல்களைச் சோ்ந்த 65,651 காா்களை திரும்பப் பெறவுள்ளதாக ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம் (ஹெச்சிஐஎல்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2018-இல் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்ட எரிபொருள் பம்புகளில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், என்ஜினை இயக்குவதில் சிக்கல்கள் இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த காலகட்டத்தில் தயாரித்து விற்கப்பட்ட 32,498 அமேஸ் காா்கள், 16,434 ஹோண்டா சிட்டி, 7,500 ஜாஸ், 7,057 டபிள்யூஆா்-வி, 1,622 பிஆா்-வி, 360 பிரையோ மற்றும் 180 சிஆா்-வி காா்களை திரும்பப் பெற்று புதிய எரிபொருள் பம்புகளை இலவசமாக மாற்றித் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி ஜூன் 20-லிருந்து தொடங்கும் என ஹோண்டா அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com