முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் 52% அதிகரிப்பு

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்க நகைக் கடனுக்கான தேவை அதிகரித்ததால் அந்த நிறுவனத்தின் லாபம் உயா்ந்ததாக தெரியவந்துள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் 52% அதிகரிப்பு

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்க நகைக் கடனுக்கான தேவை அதிகரித்ததால் அந்த நிறுவனத்தின் லாபம் உயா்ந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தங்க நகைக்கடன் பிரிவு சிறப்பாக இருந்ததால் இந்த ஆண்டு லாபம் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.548.56 கோடியாகும். நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,633.58 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.2,088.84 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.2,017.81 கோடியில் இருந்து ரூ.2,562.96 கோடியாக அதிகரித்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டில் நிகர லாபம் 51 சதவீதம் அதிகரித்து, ரூ.3,168.68 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,683.98 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.7,594.43 கோடியாக இருந்தது. 2019-20-ஆம் நிதியாண்டில் இடைக்கால ஈவுத் தொகையாக ஒரு பங்குக்கு ரூ.15 அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com