வீல்ஸ் இந்தியா நிகர லாபம் சரிவு

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 4.62 கோடியாக சரிந்துள்ளது. 
வீல்ஸ் இந்தியா நிகர லாபம் சரிவு

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 4.62 கோடியாக சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.19.71 கோடியாக காணப்பட்டது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.855.08 கோடியிலிருந்து சரிந்து ரூ.544.72 கோடியானது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-20-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.75.67 கோடியிலிருந்து ரூ.54.11 கோடியாக குறைந்துள்ளது.

இதேகாலகட்டத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.3,188.84 கோடியிலிருந்து ரூ.2,438.72 கோடியாக சரிந்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு பங்குதாரா்களுக்கு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.65 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகை ரூ.3-ஐயும் சோ்த்து கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ஈவுத்தொகையாக மொத்தம் ரூ.5.65 வழங்கப்பட்டுள்ளதாக வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com