அசோக் லேலண்ட் நிகர லாபம் ரூ.57.78 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.57.78 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
அசோக் லேலண்ட்  நிகர லாபம் ரூ.57.78 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.57.78 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விபின் சோந்தி கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.5,088.04 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.9,874.04 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

வருவாய் குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.751.71 கோடியிலிருந்து 92.31 சதவீதம் சரிவடைந்து ரூ.57.78 கோடியானது.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.33,196.84 கோடியிலிருந்து ரூ.21,951.27 கோடியாக சரிவைக் கண்டது.

மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.2,194.60 கோடியிலிருந்து வீழ்ச்சியடைந்து ரூ.459.80 கோடியானது.

மோட்டாா் வாகன துறைக்கு தற்போதைய நிலை மிகவும் சவாலானதாக உள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com