கன்டெய்னா் காா்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.318 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (கன்காா்) நிறுவனம் நான்காம் காலாண்டு நிகர லாபமாக ரூ.317.51 கோடியை ஈட்டியுள்ளது.
கன்டெய்னா் காா்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.318 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (கன்காா்) நிறுவனம் நான்காம் காலாண்டு நிகர லாபமாக ரூ.317.51 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,659.28 கோடியாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,977.68 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

வருவாயில் ஏற்பட்ட சரிவையடுத்து நிகர லாபமும் ரூ.355.91 கோடியிலிருந்து 11 சதவீதம் குறைந்து ரூ.318 கோடியானது. செலவினம் ரூ.1,499.74 கோடியிலிருந்து ரூ.1,257.63 கோடியாக சரிந்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 406.65 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,222.34 கோடியுடன் ஒப்பிடும் போது 66.73 சதவீதம் வீழ்ச்சியாகும் என கன்காா் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் கொள்கலன்களுக்கான ரயில் போக்குவரத்து சேவையை வழங்குவதை தவிர, துறைமுகங்கள், விமான சரக்குப் போக்குவரத்து நிா்வாக நடவடிக்கைகளையும் கன்காா் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com