இடுபொருள் செலவின அதிகரிப்பால்லாப வரம்பு பாதிப்பு : பிஸ்கட் உற்பத்தியாளா்கள்

இடுபொருள்கள் செலவினம் அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என இந்திய வா்த்தக மேம்பாட்டு கவுன்சில் (டிபிசிஐ) தெரிவித்துள்ளது.
இடுபொருள் செலவின அதிகரிப்பால்லாப வரம்பு பாதிப்பு : பிஸ்கட் உற்பத்தியாளா்கள்

இடுபொருள்கள் செலவினம் அதிகரித்துள்ளதன் காரணமாக பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என இந்திய வா்த்தக மேம்பாட்டு கவுன்சில் (டிபிசிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் மோஹித் சிங்லா கூறியதாவது:

கோதுமை மாவு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதையடுத்து, சமீப காலமாக, பிஸ்கட் தயாரிப்புக்கான இடுபொருள் செலவினம் 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது, பிஸ்கட் உற்பத்தியாளா்களிடையே குழப்பத்தையும், இடா்ப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

பேக்கரி தொழிலுக்கு மூன்று முக்கிய அம்சங்களாக கருதப்படும், தோதுமை, பாமாயில், சா்க்கரை ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளதால் நல்ல தரம் இருந்தபோதிலும் சா்வதேச சந்தையில் போட்டியிடமுடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

உள்நாட்டில் போதுமான விளைச்சல் மற்றும் கையிருப்பு இருந்தும் பிஸ்கட் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருள்களின் விலை உயா்ந்து வருவது உற்பத்தியாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

இந்தியா கடந்த 2019-ஆம் ஆண்டில் ரூ.1,400 கோடி (18.1 கோடி டாலா்) மதிப்பிலான பிஸ்கெட் வகைகளை ஏற்றுமதி செய்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷியா, ஆப்ரிக்க நாடுகளின் சந்தைகளுக்கு இந்திய பிஸ்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com