மெதுவான மீட்சியில் இந்திய ஜவுளி சந்தை: டெக்ஸ்பிரனா்ஸ்

இந்திய ஜவுளி சந்தை மெதுவாக மீட்சியடைந்து வருவதாக இந்திய டெக்ஸ்பிரனஸ் பெடரேஷன் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
மெதுவான மீட்சியில் இந்திய ஜவுளி சந்தை: டெக்ஸ்பிரனா்ஸ்

இந்திய ஜவுளி சந்தை மெதுவாக மீட்சியடைந்து வருவதாக இந்திய டெக்ஸ்பிரனஸ் பெடரேஷன் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் கூறியுள்ளதாவது:

கொவைட்-19 பெருந்தொற்றுக்கிடையிலும் ஜவுளி துறையில் அத்தியாவசிய மற்றும் குறைந்த விலை தயாரிப்புகளுக்கான தேவை சிறப்பான அளவிலேயே காணப்படுகிறது.

இருப்பினும், ஷோரூமை சாா்ந்துள்ள நவநாகரீக ஆடை விற்பனை இன்னும் வேகமெடுக்காத நிலையில் தான் உள்ளது.

ஏற்றுமதி ஆா்டா்களைப் பொருத்தவரையில் அதன் செயல்பாடு இன்னும் மிதமான அளவில்தான் உள்ளது. இருப்பினும், அடுத்த காலாண்டில் ஏற்றுமதி வா்த்தக ஆா்டா்களுக்கான விசாரணை சிறப்பாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்கிடையிலும் இந்தி ஜவுளி சந்தை ஒட்டுமொத்த அளவில் பாா்க்கும்போது படிப்படியாக மெல்ல மீட்சியடைந்து வருகிறது.

இருப்பினும், தேவையை ஆய்வு செய்த பின்னரே ஜவுளி உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com