Enable Javscript for better performance
செளத் இந்தியன் வங்கி வருவாய் ரூ.8,810 கோடி- Dinamani

சுடச்சுட

    

    செளத் இந்தியன் வங்கி வருவாய் ரூ.8,810 கோடி

    By DIN  |   Published on : 28th June 2020 11:29 PM  |   அ+அ அ-   |    |  

    south073543

    செளத் இந்தியன் பேங்க் கடந்த நிதியாண்டில் ரூ.8,809.55 கோடி வருவாய் ஈட்டியது.

    தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.2,341.88 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,026.59 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

    அந்த காலாண்டில், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.219.15 கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து ரூ.723.80 கோடியானது. இதையடுத்து, வங்கிக்கு நிகர அளவில் ரூ.143.69 கோடி இழப்பு ஏற்பட்டது. அதேசமயம், 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கி ரூ.70.51 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.

    2019-20 முழு நிதியாண்டில் வங்கியின் வருவாய் ரூ.7,602.73 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8,809.55 கோடியைத் தொட்டது. நிகர லாபம் ரூ.247.53 கோடியிலிருந்து 58 சதவீதம் சரிவடைந்து ரூ.104.59 கோடியாக இருந்தது.

    மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 4.92 சதவீதத்திலிருந்து 4.98 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 3.45 சதவீதத்திலிருந்து 3.34 சதவீதமாகவும் இருந்தது என செளத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

    kattana sevai