டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்தது. 
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்தது. 

இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவித்ததாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது. அதேபோன்று,  டாலருக்கான தேவையும் குறைந்துள்ளது. இதையடுத்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது. 

இந்த நிலையில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் தேக்க நிலை, அந்நிய முதலீடு வெளியேற்றம், கொவைட்-19 நோய்த்தொற்று அதிகரிப்பு முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்திய அச்ச உணர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் ரூபாய் மதிப்பின் விறுவிறு ஏற்றத்துக்கு தடைக்கல்லாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 75.64-ஆக சரிந்திருந்தது. பின்னர் சாதகமான நிலவரங்களால் டாலருக்கான தேவை குறைந்ததையடுத்து ரூபாய் மதிப்பு வர்த்தகத்தின் இடையில் அதிகபட்சமாக ரூ.75.52 வரை உயர்ந்தது. 

இருப்பினும், வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 7 காசுகள் மட்டுமே உயர்ந்து 75.58-இல் நிலைபெற்றது என அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிகர அளவில் ரூ.753.18 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். 

மேலும், சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.15 சதவீதம் சரிவடைந்து 40.14 டாலராக இருந்தது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com