ஹட்கோ நிறுவனம்நிகர லாபம் ரூ.441 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த ஹட்கோ நிறுவனத்தின் கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.440.91 கோடியாக இருந்தது.
ஹட்கோ
ஹட்கோ

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த ஹட்கோ நிறுவனத்தின் கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.440.91 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.236.29 கோடியுடன் ஒப்பிடுகையில் 87 சதவீதம் அதிகம்.

மொத்த வருவாய் ரூ.1,493.35 கோடியிலிருந்து ரூ.1,900.40 கோடியாக அதிகரித்தது.

2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,591.22 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,571.84 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,179.85 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.1,708.20 கோடியாகவும் இருந்தது என ஹட்கோ பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

வீடு மற்றும் வா்த்தகம் சாரா நகா்ப்புற கட்டமைப்புகளுக்கு தேவையான நிதி உதவிகளை ஹட்கோ வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com