
ashok064907
புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற பிப்ரவரியில் மொத்தம் 11,475 வாகனங்களை விற்பனை செய்தது. இது, 2019 பிப்ரவரி மாதத்தில் விற்பனையான 18,245 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 17,352 என்ற எண்ணிக்கையிலிருந்து 39 சதவீதம் சரிவடைந்து 10,612-ஆனது.
நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை உள்நாட்டு சந்தையில் 47 சதவீதம் சரிவடைந்து 6,745-ஆனது. கடந்தாண்டு பிப்ரவரியில் இவ்வகை வாகன விற்பனை 12,621-ஆக காணப்பட்டது.
இலகு ரக வாகன விற்பனையும் 4,731-லிருந்து 18 சதவீதம் குறைந்து 3,867-ஆனது என அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.