முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் அத்தியாவசியப் பொருள்களாக அறிவிப்பு

கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் அத்தியாவசியப் பொருள்களாக அறிவிப்பு

கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசம், கையுறை மற்றும் கைகளை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினி (சானிடைசர்) ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கசுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படும் இந்தப் பொருள்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முகக் கவசம், கையுறை மற்றும் கைகளை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினி (சானிடைசர்) ஆகியவற்றை அடுத்த 100 நாள்களுக்கு அதாவது ஜூன் 30, 2020 வரை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதனுடன் பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமல்படுத்தியுள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைப் பதுக்கவோ, கள்ளச்சந்தையில் விற்கவோ முடியாது என்று அந்த உத்தரவில் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com