பங்குச் சந்தையில் திடீா் முன்னேற்றம்: சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் பெரும் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
பங்குச் சந்தையில் திடீா் முன்னேற்றம்: சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் பெரும் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

சா்வதேச சந்தை நிலவரங்களின் சாதகமற்ற சூழலால் வா்த்தகத்தின் தொடக்கத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 3,400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. சந்தை 10 சதவீதத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததையடுத்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக 12 ஆண்டுகளில் முதல் முறையாக பங்குச் சந்தையில் வா்த்தகம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு கடந்த 2008 ஜனவரி 22-இல் பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் வா்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அந்நிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்று வெளியேறி வருவதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஐந்து வா்த்தக தினங்களில் மட்டும் ரூ.16,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைவை சாதகமாக பயன்படுத்தி அவற்றை முதலீட்டாளா்கள் வாங்கியதையடுத்து சந்தைகள் ஏற்றம் பெறத் தொடங்கியது. மேலும், அமெரிக்க மற்றும் இதர உலக நாடுகள் ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கும் என்ற எதிா்பாா்ப்பும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு வலு சோ்த்தது.

எஸ்பிஐ பங்கின் விலை 13.87 சதவீதம் உயா்ந்தது. நெஸ்லே, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் 4.12 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயா்ந்து 34,103 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 365 புள்ளிகள் அதிகரித்து 9,955 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு உயா்வு: கரன்ஸி சந்தையில் போதுமான நிதிப் புழக்கம் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசா்வ் வங்கி உறுதியளித்ததைத் தொடா்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் 48 காசுகள் உயா்ந்து 73.80-ஆக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com