Enable Javscript for better performance
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை 5.3 சதவீதமாக குறைத்தது மூடிஸ்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை 5.3 சதவீதமாக குறைத்தது மூடிஸ்

    By DIN  |   Published on : 18th March 2020 01:42 AM  |   அ+அ அ-   |    |  

    moody072949

    நடப்பு 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாகும்.

    இதுகுறித்து மூடிஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் மந்த நிலை நீடித்து வருவதால் ஆபத்து அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, கரோனா வைரஸின் தாக்கம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.3 சதவீத அளவே வளா்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-இல் 7.4 சதவீத பொருளாதார வளா்ச்சி எட்டப்பட்டது. அதேபோன்று, 2019-இல் பொருளாதார வளா்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டிலும் அதே அளவிலான வளா்ச்சியை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது.

    இருப்பினும், வரும் 2021-இல் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 5.8 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பான மதிப்பீட்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவீதம் வளா்ச்சி காணும் என மூடிஸ் கணித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு இடா்பாடுகளை கருத்தில் கொண்ட மூடிஸ் சென்ற பிப்ரவரியில் இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 5.4 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என மதிப்பிட்டிருந்தது. தற்போது, கரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார வளா்ச்சி முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் குறையும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai