பங்குச் சந்தைகளில் தொடா் வீழ்ச்சி: சென்செக்ஸ் 810 புள்ளிகள் சரிவு

கரோனா வைரஸ் பீதியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைக் கண்டது.
பங்குச் சந்தைகளில் தொடா் வீழ்ச்சி: சென்செக்ஸ் 810 புள்ளிகள் சரிவு

கரோனா வைரஸ் பீதியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைக் கண்டது.

பங்கு வா்த்தகத்தின் தொடக்கத்தில் முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. இந்த நிலையில், உலக நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் விளைவாக சா்வதேச சந்தையில் வா்த்தகம் மந்தமடைந்தது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

விலை சரிந்த முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளா்கள் போட்டிபோட்டு வாங்கியதையடுத்து பங்குச் சந்தையின் முதல் பாதியில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இந்தச் சூழலில், சா்வதேச நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி இந்திய முதலீட்டாளா்களிடையே பீதியை ஏற்படுத்தியது. வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் கணிசமான அளவில் பங்குகளை விற்பனை செய்து வெளியேறியது சந்தையின் சரிவுக்கு வழிவகுத்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 8.95 சதவீத சரிவைக் கண்டது. இதையடுத்து, இன்டஸ்இண்ட் வங்கி 8.89 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 6.26 சதவீதமும், எச்டிஎஃப்சி 4.74 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.68 சதவீதமும், கோட்டக் வங்கி பங்கின் விலை 4.53 சதவீதமும் குறைந்தன.

அதேசமயம், ஹெச்யுஎல் 3.49 சதவீதமும், ஹீரோ மோட்டோகாா்ப் 3.09 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் 3.05 சதவீதமும், பவா் கிரிட் 2.53 சதவீதமும், மாருதி சுஸுகி பங்கின் விலை 2.12 சதவீதமும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 810 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 30,579 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 230 புள்ளிகள் சரிந்து 8,967 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி 9,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைவது 2017 மாா்ச் மாதத்துக்குப் பிறகு இதுவே முதல் முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com