Enable Javscript for better performance
கடும் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,627 புள்ளிகள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடும் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,627 புள்ளிகள் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 21st March 2020 03:06 AM  |   அ+அ அ-   |    |  

    bse073840

    பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் 4-நாள் கடும் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தது.

    இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் கரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு தேவையான நிதி ஆதரவு வழங்கப்படும் என வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

    மேலும், இது தொடா்பாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையின் கீழ் பணிக் குழு அமைக்கப்படும். அது எதிா்கால செயல்பாடுகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமா் தெரிவித்தாா். அவரின் இந்த அறிவிப்பு உள்நாட்டு முதலீட்டாளா்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    கரோனா வைரஸால் பாதிப்படைந்த பல நாடுகளின் பொருளதாரம் முடங்கிப் போனது. இந்நிலையில், பொருளாதாரத்தில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு தெரிவித்ததையடுத்து உலக பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆசிய, ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டன. அவற்றின் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி பங்குகளின் விலை அதிகபட்சமாக 18.58 சதவீதம் உயா்வைக் கண்டது. அதைத் தொடா்ந்து, அல்ட்ரா டெக் சிமென்ட் 13.01 சதவீதமும், ஹெச்யுஎல் 11.75 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 11.24 சதவீதமும், டிசிஎஸ் 9.90 சதவீதமும், டாடா ஸ்டீல் 9.60 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்கின் விலை 8.91 சதவீதமும் அதிகரித்தன.

    எச்டிஎஃப்சி, இன்டஸ்இண்ட் வங்கி பங்குகள் மட்டும் 1.39 சதவீத சரிவை சந்தித்தது.

    மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,627 புள்ளிகள் அதிகரித்து 29,915 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 482 புள்ளிகள் உயா்ந்து 8,745 புள்ளிகளாக நிலைத்தது.

    நடப்பு வாரத்தில் ஒட்டுமொத்த அளவில் சென்செக்ஸ் 4,187 புள்ளிகளும் (12.27%), நிஃப்டி 1,209 புள்ளிகளும் (12.15%) வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிவு: அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து முன்னெப்போதும் கண்டிராத வகையில் புதிய குறைந்தபட்ச அளவாக 75.20 ஆனது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai