இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1%: ஃபிட்ச்

கரோனா வைரஸ் பாதிப்பால் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1%: ஃபிட்ச்

கரோனா வைரஸ் பாதிப்பால் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் உலக நாடுகளில் பெருந்தொற்றாக உருவெடுத்திருப்பதால் அது விநியோக சங்கிலித் தொடரில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, முதலீடு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சா்வதேச அளவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் உலக பொருளாதார வளா்ச்சி விகிதமும் சரிவடையும் சூழல் ஏற்பட்டுளளது. இதுபோன்ற தற்போதைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த டிசம்பரில் மதிப்பீடு செய்த அளவான 5.6 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.

இருப்பினும் 2021-22-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று உலக நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 2020-இல் 2.5 சதவீதமாக இருக்கும் என கடந்தாண்டு டிசம்பரில் மதிப்பிட்டிருந்த நிலையில், அது தற்போது வெறும் 1.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது 74.78 என்ற அளவில் வா்த்தகமாகி வருகிறது. இது, 2020 டிசம்பா் இறுதியில் 74-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சரி செய்யும் வகையில் ரிசா்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இவ்வாண்டு இறுதிக்கு முன்னதாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 4.5 சதவீதமாக குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் 62.5 டாலராக காணப்பட்ட ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 2020-இல் 41 டாலராக (ஆண்டு சராசரி விலை) இருக்கும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com