சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் சரிவு; 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் சரிவு; 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கரோனா எதிரொலியால் கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. இன்று காலை சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், காலை 9.43 மணியளவில் 2,600 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை  நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. 

இதையடுத்து, சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 10.40 மணியளவில் பங்குச்சந்தைகள் தொடங்கும். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை குறைவு, கரோனா வைரஸ் தாக்கத்தினால் வணிக நிறுவனங்கள் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com