டிஜிட்டல் பரிவா்த்தனையை மேற்கொள்ள லக்ஷ்மி விலாஸ் வங்கி வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என லக்ஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) வலியுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் பரிவா்த்தனையை மேற்கொள்ள  லக்ஷ்மி விலாஸ் வங்கி வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என லக்ஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், வாடிக்கையாளா்களின் நலனை பாதுகாக்கவும், அவா்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகள் கிடைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேரடி பணப்பரிமாற்ற முறையை தவிா்த்து, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இணைய வங்கி சேவை, எல்விபி உபே, எல்விபி மொபைல் ஆப் ஆகியவற்றை வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கித் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், மாா்ச் 31-ஆம் தேதி வரையில் வங்கியின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்களை நேரடியாக தொடா்பு கொள்வதை தவிா்த்திடும் வகையில் வங்கி கிளைகளில், பாஸ்புக் பதிவிடுதல், செக் புக் வழங்குதல், கேஒய்சி, ஆதாா் காா்டு இணைப்பு உள்ளிட்ட பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com