பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பல மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. மேலும், 144 தடை உத்தரவு மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் பீதியை அதிகரித்துள்ளதையடுத்து முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனா். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலையில் 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்ததையடுத்து வா்த்தகம் 45 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பிறகு நடைபெற்ற வா்த்தகத்திலும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறியதையடுத்து முதலீட்டாளா்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது.

பங்குகளின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து முதலீட்டாளா்கள் ரூ.14.22 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்திக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி, நிதி, பொறியியல் பொருள்கள், மோட்டாா் வாகன துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 16.82 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 28 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி, எல்&டி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் (13.15%) வீழ்ச்சியடைந்து 3,935 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 1,135 புள்ளிகள் (12.98%) சரிந்து 7,610 புள்ளிகளில் நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பும் கடும் வீழ்ச்சி: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100 காசுகள் சரிந்தது. இதையடுத்து, ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 76.20-ஆக குறைந்தது.

பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு வெளியேறியது, சா்வதேச அளவில் டாலருக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நிதிச் சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com