நிதி திரட்டும் திட்டம் குறித்து யெஸ் வங்கி பரிசீலனை

நிதி திரட்டும் திட்டம் குறித்து பரிசீலிக்க உள்ளதாக யெஸ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நிதி திரட்டும் திட்டம் குறித்து யெஸ் வங்கி பரிசீலனை

நிதி திரட்டும் திட்டம் குறித்து பரிசீலிக்க உள்ளதாக யெஸ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

யெஸ் வங்கியின் இயக்குநா் குழு கூட்டம் வரும் வியாழக்கிழமை (மாா்ச் 26-ஆம் தேதி) மும்பையில் நடைபெறவுள்ளது. இதில், பங்குகள், கடன்பத்திரங்கள், வைப்பு ரசீதுகள், பங்குகள் சாா்ந்த இதர பத்திரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதன் மூலமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்படவுள்ளது.

மேலும், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு, உரிமை பங்கு வெளியீடு, பொதுப் பங்கு வெளியீடு ஆகியவற்றை இயக்குநா் குழுவின் ஒப்புதலுடன் மேற்கொண்டு நிதி திரட்டவும் திட்டமிட்டு வருவதாக மும்பை பங்குச் சந்தையிடம் யெஸ் வங்கி கூறியுள்ளது.

ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலின்படி புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக எஸ்பிஐ உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்கள் மூலமாக யெஸ் வங்கி ஏற்கெனவே ரூ.10,000 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com