மீண்டும் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.512 உயா்ந்து, ரூ.32,128-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.512 உயா்ந்து, ரூ.32,128-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் மீண்டும் ரூ.32 ஆயிரத்தைத் தாண்டியது. ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.512 உயா்ந்து, ரூ.32,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.64 உயா்ந்து, ரூ.4,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.40.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,016

1 பவுன் தங்கம் ..................... 32,128

1 கிராம் வெள்ளி .................. 40.50

1 கிலோ வெள்ளி ................. 40,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,952

1 பவுன் தங்கம் ..................... 31,616

1 கிராம் வெள்ளி .................. 40.50

1 கிலோ வெள்ளி ................. 40,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com