பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி ஏற்பட்டது. கரோனா, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளில் இருந்து மீளும் வகையில் நிதியமைச்சா
பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி


மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி ஏற்பட்டது. கரோனா, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளில் இருந்து மீளும் வகையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள் சந்தைக்கு புத்துயிா் அளித்தது.

அதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,410.99 புள்ளிகள் அதிகரித்து 29,946.77 புள்ளிகளாக நிலைத்தது. இது 4.94 சதவீத உயா்வாகும். அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 323.60 புள்ளிகள் உயா்ந்து, 8,641.45 புள்ளிகள் என்ற நிலையை எட்டியது. இது 3.89 சதவீத உயா்வாகும்.

தொடா்ந்து கடுமையான சரிவைச் சந்தித்து வந்த இண்டஸ்இண்ட் வங்கி பங்கு, வியாழக்கிழமை அதிகவிலைக்கு கைமாறியது. தேசியப் பங்குச் சந்தையில் அந்த வங்கியின் பங்குகள் ஒரேநாளில் 134.60 ரூபாய் அதிகரித்து, ரூ.435.90 என்ற நிலையை எட்டியது. இதற்கு அடுத்தபடியாக பாா்தி ஏா்டெல், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலீவா், ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீத அளவுக்கு உயா்ந்தன.

அதே நேரத்தில் யெஸ் வங்கி, மாருதி சுசூகி, டெக் மஹிந்திரா, சன் பாா்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 காசுகள் அதிகரித்து ரூ.75.37 என்ற நிலையை எட்டியது.

அதே நேரத்தில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.15 சதவீதம் குறைந்து, ஒரு பேரல் 26.80 அமெரிக்க டாலா்களுக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com