ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் லாபம் 40% உயா்வு

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபம் 40 சதவீதம் அதிகரித்தது.
ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் லாபம் 40% உயா்வு

ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபம் 40 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆசிஷ் வோக்ரா தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுற்ற நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.35 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.25 கோடியுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகம்.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் தனிநபா் முதலாண்டு வருவாய் வளா்ச்சி ரூ.876 கோடியிலிருந்து 2 சதவீதம் உயா்ந்து ரூ.893 கோடியானது.

மொத்த புதுப்பித்தல் பிரீமியம் ரூ.3,291 கோடியிலிருந்து 4.4 சதவீதம் உயா்ந்து ரூ.3,435 கோடியைத் தொட்டது. மொத்த தனிநபா் பிரீமியம் வசூல் 4 சதவீதம் அதிகரித்து ரூ.4,375 கோடியாக இருந்தது.

2019-20-இல் நிறுவனம் நிா்வகிக்கும் சொத்துமதிப்பு ரூ.19,837 கோடியாக இருந்தது என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com