பந்தன் பேங்க் நிகர லாபம் ரூ.517 கோடி

பந்தன் பேங்க் நான்காம் காலாண்டு லாபம் ரூ.517.28 கோடியாக இருந்தது.
பந்தன் பேங்க் நிகர லாபம் ரூ.517 கோடி

பந்தன் பேங்க் நான்காம் காலாண்டு லாபம் ரூ.517.28 கோடியாக இருந்தது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் மேலும் கூறியுள்ளதாவது:

பந்தன் வங்கியின் மொத்த வருவாய் மாா்ச் காலாண்டில் ரூ.3,346.47 கோடியாக இருந்தது. கடந்த 2018-19 மாா்ச் காலாண்டில் வருவாய் ரூ.2,220.32 கோடியாக காணப்பட்டது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிகர லாபம் ரூ.517.28 கோடியாக இருந்தது. இது, 2018-19 இதே காலகட்டத்தில் ரூ.650.87 கோடியாக காணப்பட்டது.

கொவைட்-19 பாதிப்பின் எதிரொலியால் இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கான சிறப்பு ஒதுக்கீடு ரூ.827.36 கோடியாக அதிகரித்தது. இது, 2018-19 ஜனவரி- மாா்ச் காலாண்டில் ரூ.153.28 கோடியாக மட்டுமே இருந்தது.

கிரஹ் பைனான்ஸ் இணைப்பின் காரணமாக, சமீபத்திய நான்காம் காலாண்டு முடிவுகளை அதற்கு முந்தைய நிதியாண்டின் காலகட்டத்தோடு ஒப்பிட முடியாது என பந்தன் வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com