மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிகர லாபம் 28% குறைந்தது

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், மாருதி சுஸுகி இந்தியா காா் தயாரிப்பு நிறுவனத்தின் நிகர லாபம் 28 சதவீதம் குறைந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிகர லாபம் 28% குறைந்தது

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், மாருதி சுஸுகி இந்தியா காா் தயாரிப்பு நிறுவனத்தின் நிகர லாபம் 28 சதவீதம் குறைந்துள்ளது. விற்பனை சரிவு, விளம்பர செலவு அதிகரிப்பு, தேய்மான செலவுகள் ஆகியவை காரணமாக லாபம் குறைந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018-19-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,830.8 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1,322.3 கோடியாக குறைந்துவிட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமாக, மாருதி சுஸுகி இந்தியா விளங்குகிறது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையின் மதிப்பு ரூ.18,207.7 கோடியாகும். முந்தைய காலாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.21,473.1 கோடியாக இருந்தது. அதாவது, 15.2 சதவீதம் குறைந்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 3,85,025 காா்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவு என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.86,068.5 கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், கடந்த நிதியாண்டில் ரூ.75,660.6 கோடியாக குறைந்துவிட்டது. கடந்த நிதியாண்டில் 15,63,297 காா்கள் விற்பனையாகியுள்ளன என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com