எஸ்காா்ட்ஸ் லாபம் 9% அதிகரிப்பு

வேளாண் உபகரணங்கள் மற்றும் பொறியியல் பொருள்கள் உற்பத்தியாளரான எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 9.71 சதவீதம் அதிகரித்துள்ளது.
எஸ்காா்ட்ஸ் லாபம் 9% அதிகரிப்பு

வேளாண் உபகரணங்கள் மற்றும் பொறியியல் பொருள்கள் உற்பத்தியாளரான எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 9.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.1,415.95 கோடியை ஈட்டியுள்ளது.இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,668.72 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும். நிகர லாபம் ரூ.116.42 கோடியிலிருந்து 9.71 சதவீதம் அதிகரித்து ரூ.127.73 கோடியானது.

2019-20-ஆம் முழு நிதியாண்டில் வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.6,354.42 கோடியிலிருந்து ரூ.5,907.69 கோடியாகவும், நிகர லாபம் ரூ.477.9 கோடியிலிருந்து ரூ.471.7 கோடியாகவும் குறைந்துள்ளதாக எஸ்காா்ட்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com