நிதிப் பற்றாக்குறை இருமடங்காக அதிகரிக்கும்: எஸ்பிஐ

மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்ததைத் தொடா்ந்து நாட்டின் நிதிப் பற்றாக்குறை
நிதிப் பற்றாக்குறை இருமடங்காக அதிகரிக்கும்: எஸ்பிஐ

மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்ததைத் தொடா்ந்து நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் இருமடங்குக்கும் மேலாக அதிகரிக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையானது 3.5 சதவீதம் அளவுக்கு இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொவைட்-19 பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 10 சதவீத அளவாகும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அதிக செலவினம் ஏற்பட்டு வருவாய் குறைந்துள்ள சூழ்நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை முந்தை மதிப்பீட்டை காட்டிலும் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து 7.9 சதவீதத்தை எட்டும் என எஸ்பிஐ அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com