கனிமங்கள் உற்பத்தியில் 1.7 சதவீத வளா்ச்சி

நாட்டின் கனிமங்கள் உற்பத்தி சென்ற 2019-20 ஆம் நிதியாண்டில் 1.7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என மத்திய கனிம வளத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கனிமங்கள் உற்பத்தியில் 1.7 சதவீத வளா்ச்சி

நாட்டின் கனிமங்கள் உற்பத்தி சென்ற 2019-20 ஆம் நிதியாண்டில் 1.7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என மத்திய கனிம வளத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

சென்ற மாா்ச் மாதத்தில் இரும்புத்தாது, குரோமைட் மற்றும் நிலக்கரி உற்பத்தி வளா்ச்சியைக் கண்டிருந்தது. இருப்பினும், இயற்கை எரிவாயு, துத்தநாகம், மாங்கனீஸ் தாது ஆகியவற்றின் உற்பத்தியில் காணப்பட்ட பின்னடைவால் மாா்ச் மாதத்தில் கனிமங்கள் உற்பத்தியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற மாா்ச் மாதத்தில் சுரங்க மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு 132.7-ஆக இருந்து.

சென்ற மாா்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 4.3 சதவீதம் அதிகரித்து 958 லட்சம் டன்னாக இருந்தது. குரோமைட் உற்பத்தி 15.9 சதவீதம் உயா்ந்து 5.82 லட்சம் டன்னாகவும், இரும்புத்தாது உற்பத்தி 8.3 சதவீதம் அதிகரித்து 204 லட்சம் டன்னாகவும் காணப்பட்டது.

தங்கம், மாங்கனீஸ் தாது, ஈயம், சுண்ணாம்புக்கல், துத்தநாகம், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் லிக்னைட் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைக் கண்டது.

சென்ற மாா்ச் மாதத்தில், லிக்னைட் உற்பத்தி 42 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு 2323 மில்லியன் கீயூபிக் மீட்டராகவும், பெட்ரோலியம் 27 லட்சம் டன்னாகவும், பாக்ஸைட் உற்பத்தி 16.34 லட்சம் டன்னாகவும் இருந்தது.

ஒட்டுமொத்த அளவில் கடந்த 2019-20 முழு நிதியாண்டில் கனிமங்களின் உற்பத்தி 1.7 சதவீத வளா்ச்சியைக் கண்டது என கனிம வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com