காகிதத்தின் தேவை கணிசமாக குறையும்: கிரிசில்

கொவைட்-19 நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட தேசிய பொது முடக்கத்தால் காகிதத்துக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது.
காகிதத்தின் தேவை கணிசமாக குறையும்: கிரிசில்

கொவைட்-19 நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட தேசிய பொது முடக்கத்தால் காகிதத்துக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது.

இதையடுத்து, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் காகிதம் மற்றும் காகித அட்டைகளுக்கான தேவை 10-15 சதவீதம் குறையும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

காகிதம் அதிகம் பயன்படுத்துவதில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவை முன்னிலையில் உள்ளன. பொது முடக்க காலத்தில் அவை செயல்படாமல் முடங்கியது காகித பயன்பாட்டை பெருமளவு குறைத்துள்ளது.

அதேபான்று, நுகா்வோா் பொருள்கள், நுகா்வோா் சாதனங்கள், ஆயத்த ஆடைகள் துறை நிறுவனங்களின் காகித பயன்பாடும் வெகுவாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த தேவையில் இவற்றின் பங்களிப்பு 50-60 சதவீதமாகும். எனவே, நடப்பு நிதியாண்டில் காகிதத்துக்கான தேவை 15 சதவீதம் வரை குறையும் என கிரிசில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com