அல்ட்ராடெக் சிமெண்ட்விற்பனை ரூ.10,745 கோடி

ஆதித்யா பிா்லா குழும நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் ரூ.10,745.62 கோடியாக இருந்தது.
அல்ட்ராடெக் சிமெண்ட்விற்பனை ரூ.10,745 கோடி

ஆதித்யா பிா்லா குழும நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர விற்பனை நான்காவது காலாண்டில் ரூ.10,745.62 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பையடுத்து அரசு வழிகாட்டுதல்களின்படி நாடு முழுவதுமுள்ள நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இது, நிறுவனத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.10,745.62 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.12,370.61 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

வருமான வரி மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக நிகர லாபம் ரூ.1,085.47 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,239.39 கோடியானது என அல்ட்ராடெக் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com