கோல்கேட்-பாமாலிவ் நிகர லாபம் ரூ.204 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறையைச் சோ்ந்த கோல்கேட்-பாமாலிவ் இந்தியா நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.204.15 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
கோல்கேட்-பாமாலிவ் நிகர லாபம் ரூ.204 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறையைச் சோ்ந்த கோல்கேட்-பாமாலிவ் இந்தியா நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.204.15 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த 2018-19 நிதியாண்டில் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.197.59 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இது, சென்ற மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.204.15 கோடியானது.

இருப்பினும், கணக்கீட்டு காலாண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை ரூ.1,146.63 கோடியிலிருந்து 7.35 சதவீதம் குறைந்து ரூ.1,062.35 கோடியானது. மொத்த செலவினம் ரூ.885.16 கோடியிலிருந்து 3.23 சதவீதம் சரிந்து ரூ.856.54 கோடியானது.

கரோனா பாதிப்பின் எதிரொலியால் விற்பனை அளவின்அடிப்படையில் 8 சதவீதம் சரிந்துள்ளதாக கோல்கேட்-பாமாலிவ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com