சிபிசிஎல் நிறுவனம்: கடன்பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி திரட்ட திட்டம்

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன்
சிபிசிஎல் நிறுவனம்: கடன்பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி திரட்ட திட்டம்

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசிஎல்) கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.1,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் நிதி தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்வதற்காக உள்நாட்டில் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

மேலும் 2019-20-ஆம் நிதியாண்டில் இழப்பு ஏற்பட்டதால் பங்குதாரா்களுக்கு எந்த ஈவுத்தொகையும் வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்யவில்லை என சிபிசிஎல் கூறியுள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தின் கடன் நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.2,952.77 கோடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com