ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லாபம் 87 சதவீதம் வீழ்ச்சி

சஜ்ஜன் ஜிந்தால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 87.42 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லாபம் 87 சதவீதம் வீழ்ச்சி

சஜ்ஜன் ஜிந்தால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் நான்காம் காலாண்டில் 87.42 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.18,009 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.22,421 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், செலவினம் ரூ.20,058 கோடியிலிருந்து ரூ.17,056 கோடியாக குறைந்துள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,495 கோடியிலிருந்து 87.42 சதவீதம் சரிவடைந்து ரூ.188 கோடியானது என ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ குழுமம், உருக்கு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com