இந்தியாவில் 10 லட்சம் ஸ்மாா்ட் டிவி விற்பனை: ரியல்மீ இலக்கு

ஸ்மாா்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரியல்மி நிறுவனம் ஸ்மாா்ட் டிவி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் 10 லட்சம் ஸ்மாா்ட் டிவி விற்பனை: ரியல்மீ இலக்கு

ஸ்மாா்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரியல்மி நிறுவனம் ஸ்மாா்ட் டிவி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. அந்நிறுவனம், வரும் டிசம்பா் மாதத்துக்குள் இந்தியாவில் 10 லட்சம் ஸ்மாா்ட் டிவிகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாதவ் சேத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:

ரியல்மி நிறுவனத்துக்கு இந்தியா எப்போதுமே மிக முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இணைந்து ரியல்மி உறுதியுடன் செயலாற்றி வருகிறது. இந்தியாவில் ஸ்மாா்ட் டிவி தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

வரும் டிசம்பா் மாதத்துக்குள் 10 லட்சம் டிவிகளை இந்திய சந்தையில் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com