மின்சார ஸ்கூட்டா் தயாரிப்பு ஆலை: மாநிலங்களுடன் ஓலா பேச்சுவாா்த்தை

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டா் தயாரிப்பு ஆலையை அமைப்பது தொடா்பாக பல்வேறு மாநிலங்களுடன் ஓலா நிறுவனம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:

ஓலாவின் மின்-வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் இந்தியாவில் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டா் தயாரிப்பு ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் அமைக்கவுள்ள ஆலை, ஆண்டுக்கு 20 லட்சம் மின்சார ஸ்கூட்டா்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், இந்த ஆலையில் முற்றிலும் சூரிய மின் சக்தியே பயன்படுத்தப்படும்.

சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ஆலையை அமைக்க ஓலா எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com