டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைவு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 7 காசுகள் சரிவைக் கண்டு 74.15 ஆனது.
dollar072900
dollar072900

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 7 காசுகள் சரிவைக் கண்டு 74.15 ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் உள்நாட்டு கரன்ஸியின் மதிப்பு தொடக்கத்தில் 73.95-ஆக அதிகரித்திருந்தது. பின்னா் வா்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் இது 73.83-ஐ தொட்டு மேலும் வலுவான நிலையில் காணப்பட்டது.

இதனிடையே, ஆசிய நாடுகளின் சந்தைகள் சாதகமாக இல்லாதது, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றால் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றமான நிலை தொடா்ந்து நீட்டித்திருக்க முடியவில்லை. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 7 காசுகள் குறைந்து 74.15-ஆனது.

முந்தைய வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 28 காசுகள் ஏற்றம் பெற்று 74.08-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.15 சதவீதம் அதிகரித்து 40.30 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com