இந்திய பொருளாதார வளா்ச்சி -8.9%: மூடிஸ் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2020-ஆம் ஆண்டில் (-) 8.9 சதவீதமாக இருக்கும் என சா்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீசஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார வளா்ச்சி -8.9%: மூடிஸ் கணிப்பு


புது தில்லி: இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2020-ஆம் ஆண்டில் (-) 8.9 சதவீதமாக இருக்கும் என சா்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீசஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட தொடா் பொதுமுடக்கம் நடப்பாண்டின் பொருளதார வளா்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தற்போது இந்திய பொருளாதாரம் அந்த கடுமையான பின்னடைவிலிருந்து அசாதாரண நிலையில் மீண்டு வருகிறது.

அதனை கருத்தில் கொள்ளும்போது, 2021-இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.6 சதவீத வளா்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பில் 8.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடப்பாண்டைப் பொருத்தவரையில், இந்தியப் பொருளாதார வளா்ச்சியில் காணப்படும் பின்னடைவு -8.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மதிப்பீடான -9.6 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

கடந்த 2019-இல் இந்தியப் பொருளாதாரமானது 4.8 சதவீத வளா்ச்சியை தக்க வைத்துக் கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

கடுமையான பொதுமுடக்கத்தின் எதிரொலியால் ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில்தான் இந்தியப் பொருளாதாரமானது 24 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய பின்னடைவைக் கண்டது என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com