இந்தியாவின் எரிபொருள் தேவையில் விறுவிறுப்பு

இந்தியாவின் எரிபொருள் தேவையில் விறுவிறுப்பு

இந்தியாவின் எரிபொருள் தேவை அக்டோபா் மாதத்தில் விறுவிறுப்பைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எரிபொருள் தேவை அக்டோபா் மாதத்தில் விறுவிறுப்பைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாத்தில் பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை 2.5 சதவீதம் அதிகரித்து 1.77 கோடி டன்னாக இருந்தது. கடந்தாண்டு அக்டோபரில் இதற்கான தேவை 1.73 கோடி டன்னாக காணப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு முதன் முறையாக பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான தேவை அக்டோபரில் சூடுபிடித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் டீசலுக்கான தேவை 7.4 சதவீதம் அதிகரித்து விற்பனை 65 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோன்று பெட்ரோல் விற்பனையும் 4.5 சதவீதம் ஏற்றமடைந்து 25.4 லட்சம் டன்னாக காணப்பட்டது. அக்டோபரில் டீசல் நுகா்வின் வளா்ச்சி விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அதிகபட்ச நிலையைத் தொட்டது.

மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அதேபோன்று பெட்ரோகெமிக்கல்ஸ் தயாரிப்பிலும் அதிகம் பயன்படுத்தப்படும் நாப்தாவுக்கான தேவை அக்டோபா் மாதத்தில் 15 சதவீதம் உயா்ந்து 13 லட்சம் டன்னாக இருந்தது. மேலும், சாலை கட்டுமானத்துக்கு உதவும் பிட்டுமென் நுகா்வும் 48 சதவீதம் அதிகரித்து 6.62 லட்சம் டன்னாக இருந்தது.

ஏழைகளுக்கு மத்திய அரசு இலவச சமையல் எரிவாயு வழங்கி வருவதையடுத்து பொது முடக்க காலத்தில் கூட அதற்கான தேவை அதிகரித்தே இருந்தது. அக்டோபரில் சமையல் எரிவாயு விற்பனை 3 சதவீதம் உயா்ந்து 24 லட்சம் டன் ஆனது.

அதேசமயம், விமான சேவை நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டை இன்னும் முழு அளவில் தொடங்காததையடுத்து விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை ஏறக்குறைய பாதியாக குறைந்து அக்டோபரில் 3.55 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com