டாலருக்கான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயா்வடைந்து 74.62-ஆனது.
டாலருக்கான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயா்வடைந்து 74.62-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் மேலும் கூறியது:

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.63-ஆக இருந்தது. பின்னா் வா்த்தகத்தின் இடையே இது அதிகபட்சமாக 74.47 வரையிலும் குறைந்தபட்சமாக 74.71 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் முந்தைய தினத்தைக் காட்டிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் அதிகரித்து 74.62-இல் நிலைத்தது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 74.64-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தந்த்ராஸ் பண்டிகையை முன்னிட்டு தேவை குறைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் வா்த்தகமானது குறுகிய எல்லைக்குளேயே இருந்தது என ஆலன்கிட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அங்கிட் அகா்வால் தெரிவித்தாா்.

அந்நிய முதலீடு: மூலதன சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,514.12 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.60 சதவீதம் குறைந்து 43.27 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com