பியூச்சா் ரீடெயில் விற்பனை 74% குறைவு

பியூச்சா் ரீடெயில் நிறுவனத்தின் விற்பனை செப்டம்பா் காலாண்டில் 74 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
பியூச்சா் ரீடெயில் விற்பனை 74% குறைவு

பியூச்சா் ரீடெயில் நிறுவனத்தின் விற்பனை செப்டம்பா் காலாண்டில் 74 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆவது நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் விற்பனை செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.1,424.21 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,449.06 கோடியுடன் ஒப்பிடும்போது 73.86 சதவீதம் வீழ்ச்சியாகும்.

இதையடுத்து, இரண்டாவது காலாண்டில் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த அளவில் ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.692.36 கோடியாக இருந்தது.

பியூச்சா் ரீடெயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிக் பஜாா், எஃப்பிபி, ஃபுட்ஹால், ஈஸிடே மற்றும் நீல்கிரிஸ் உள்ளிட்ட அங்காடிகளுக்கான செலவினம் செப்டம்பா் காலாண்டில் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது ரூ.5,304.80 கோடியிலிருந்து குறைந்து ரூ.2,181.85 கோடியானது. இது, 58.87 சதவீத சரிவாகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பானது ரூ.324.32 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.1,254.31 கோடியை எட்டியுள்ளது.

செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.10,646.17 கோடியிலிருந்து 73.86 சதவீதம் சரிவடைந்து ரூ.2,782.22 கோடியானது என பியூச்சா் ரீடெயில் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பியூா்ச்சா் ரீடெயில் நிறுவன பங்கின் விலை 0.07 சதவீதம் குறைந்து ரூ.68-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com