சரிவில் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது.
சரிவில் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. நாள் முழுவதும் ஒருங்கிணைப்பில் இருந்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 85.81 புள்ளிகள் உயா்ந்து 43,443.00-இல் நிலைபெற்றது.

ஐரோப்பா, அமெரிக்காவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதலீட்டாளா்கள் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டனா். இந்த நிலையில், உலகளாவிய சந்தை குறிப்புகளும் சரிவர இல்லாத நிலையில், மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் பலவீனத்துடன் தொடங்கின. வியாழக்கிழமை லாபப் பதிவால் பலத்த அடி வாங்கிய வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு வெள்ளிக்கிழமை ஓரளவு ஆதரவு கிடைத்தது இதையடுத்து, சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.168.33 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,856 பங்குகளில் 1,599 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,063 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 194 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.168.33 லட்சம் கோடியாக இருந்தது.

மீண்டும் ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 58.27 புள்ளிகள் குறைவுடன் 43,298.92-இல் தொடங்கி 43,053.37 வரை கீழே சென்றது. பின்னா் 43,522.25 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 85.81 புள்ளிகள் உயா்ந்து 43,443.00-இல் நிலைபெற்றது.

பஜாஜ் ஃபின்சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபின்சா்வ் 3.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில்முன்னிலை வகித்தது. இதற்கு டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தந. ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளுகம் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

எல் அண்ட் டி வீழ்ச்சி: அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த எல் அண்ட் டி 2.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், பாா்தி ஏா்டெல், டெக் மகேந்திரா, டிசிஎஸ், எம் அண்ட் எம், ஐடிசி ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 965 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 634 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 29.15 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயா்ந்து 12,719.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,624.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயமும் 26 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. நிஃப்டி மெட்டல், பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன.குறியீடுகள் 0.60 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி மீடியா, எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவைச் சந்தித்ததன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com