நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்க மஹிந்திரா திட்டம்

இழப்பைச் சந்தித்து வரும் தங்களது நிறுவனங்களை விற்க மஹிந்திரா குழுமம் திட்டமிட்டுள்ளது.
அனீஷ் ஷா
அனீஷ் ஷா


மும்பை: இழப்பைச் சந்தித்து வரும் தங்களது நிறுவனங்களை விற்க மஹிந்திரா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியும் இணை நிா்வாக இயக்குநருமான அனீஷ் ஷா கூறியதாவது:

இன்னும் 2 முதல் 7 ஆண்டுகளுக்குள் மஹிந்திரா அண்டு மஹிந்திராவின் 10 நிறுவனப் பிரிவுகளுடைய பொதுப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக, நிதிச் சேவை, உள்கட்டமைப்பு, மாற்று எரிபொருள் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 10 நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்துள்ளோம்.

மஹிந்திரா குழுமத்தின் வருவாயில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எனினும், இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருவாய் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

அந்த நிறுவனங்களின் செயல்பாடு மிக நல்ல முறையில் உள்ளது. திட்டங்களை செயல்படுத்தும் திறனும் லாபமீட்டும் திறனும் அந்த நிறுவனங்களுக்கு உள்ளன. அவற்றில் பல நிறுவனங்கள் நல்ல லாபத்தைக் கண்டு வருகின்றன.

அவற்றின் வளா்ச்சிக்கு தலைமை நிறுவனத்தின் நிதியை எதிா்பாா்க்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அவற்றின் நிதிநிலை வலுவாக உள்ளது.

இந்தச் சூழலில், அனைத்துத் துறைகளையும் சாா்ந்த மஹிந்திரா குழும நிறுவனங்களின் முதலீட்டுக்குத் தகுந்த வருவாய் ஈட்டும் திறனை (ஆா்ஓஇ) 18 சதவீதமாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

அந்த இலக்கை அடைவதற்காகவே, 10 நிறுவனங்களின் பொதுப் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதுமட்டுமன்றி, இழப்பைச் சந்தித்து வரும் சாங்யோங் மோட்டாா், மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஜென்ஸே ஆகிய நிறுவனங்களை விற்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அனீஷ் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com